கணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி ?

     இணையத்தை  பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து  உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ்  என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை  திருடுதல் ,கணியை  முடக்குதல் என்று சைபர்  குற்றங்கள் நீள்கிறது.

 அதே வேளை தனிநபர் பாதுகாப்பு, நிறுவனங்களின்  பாதுகாப்பு வேண்டி ஏதோ ஒரு நிறுவனத்தின்  ANTIVIRUS  மென்பொருளை இலவசமாகவோ அல்லது கட்டணமாகவோ   நிறுவி இருப்போம்.ஆனால் அந்த மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா என்ற சந்தேகமும் எழலாம்.அதை எப்படி கண்டு கொள்வது என்பதை பார்க்கலாம்.

1.முதலில் கணிணியில் notepad  திறந்து கொள்ளவும் 

2.கீழ்க்கண்ட வரியை பிரதி(copy) எடுத்து ஒட்டவும் (paste) .

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

3. பின்னர் கணினித்திரையில்  eicar.com என்று பெயர் கொடுத்து file --> save as  --> all files இல்  சேமித்து விடவும்.

அடுத்த சில நொடிகளில் உங்கள்  ANTIVIRUS ஒரு எச்சரிக்கை கொண்ட சாளரம் திறக்கும் .அதில் வேண்டாத அல்லது தீங்கு விளைவிக்கும் கோப்பு உள்ளதாக  எச்சரிக்கும் .

இந்த எச்சரிக்கை கிடைத்தால் ANTIVIRUS மென்பொருள் நன்றாக வேலை செய்கிறது.

இந்த எச்சரிக்கை வரவில்லை எனில் , அந்த கோப்பை திறக்கவும் .இப்போதும் எச்சரிக்கை இல்லையெனில் ANTIVIRUS மென்பொருளை மாற்றி விடுவது நல்லது.

ANTIVIRUS மென்பொருள் தரும் எச்சரிக்கை கண்டு பயப்பட வேண்டாம் , European Institute for Computer Anti-Virus Research (EICAR).சோதனைக்கு உள்ள கோப்பு தான் அது.

Advertisements

இணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)

  இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது  நமக்கு தேவையானதுடன்  மற்ற  விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு  உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக  வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.

      நாம் பார்க்கும் பக்கத்தின்  சாரத்தைமட்டும் பார்த்தால் எப்படி  இருக்கும் , நிச்சயம்  மகிழ்ச்சியை தரும் அல்லவா !ad block  நீட்சி உலவியில் நிறுவி இருப்பவர்களுக்கு விளம்பரம் தோன்றாது.ஆனால் மற்ற எல்லாவற்றையும் நிறுத்த முடியாது.அதற்கு  அருமையான  இணைப்பு நீட்சி  (Ever note clearly )ஓன்று இருக்கிறது. இதை உலவியில் இணைத்துகொண்டால்  நாம் பார்க்கும் பக்கத்தின் சாரத்தை மட்டும் காணலாம்.மற்ற  விளம்பரம் , சமூக தளங்கள் எதுவும்பக்கத்தில்  தோன்றாது.

    உலவியின் கருவி பட்டையில் இருக்கும் இந்த நீட்சியை பார்க்கவேண்டிய பக்கத்தில் சொடுக்கினால் பக்கம் நிறம் மாறும்.பக்கத்தில் உள்ள சில பகுதிகளை நிறங்களை மாற்றி கோடிட்டு காட்ட வேண்டும் என்றாலும் செய்து கொள்ளாலம் ,மீண்டும்  பழைய பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால்மேலே உள்ள அம்பு குறியை சொடுக்கினால் போதும்.

   இதனால்  பக்கம் எளிதாக மற்றும்மெதுவாக  இணைய இணைப்பு வைத்து இருப்பவர்களும் வேகமாக பக்கத்தை  வாசிக்க முடியும்.மேலும்  பக்கத்தின்

எழுத்துகளை  பெரிது படுத்தியும்,  நிறத்தையும்  பின்புற நிறத்தையும்  மாற்றி படிக்கலாம்.அச்சு பிரதி எடுக்க வேண்டும் என்றால் அடுத்து கொள்ளலாம். பிறகு  படிக்க சேமித்து வைக்க வேண்டும்  என்றாலும் வைத்து கொள்ளலாம். அதற்கு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

      மற்றொரு செய்தி  பிளாக்கர் மட்டுமே இப்படி படிக்க முடியும்.மேலும் பல வசதிகளுக்கு கட்டணம் செலுத்தி வேண்டுவோர் பெறலாம்.இந்த நீட்சி நெருப்பு நரி , குரோம் , ஒபேரா  உலவிகளில் சிறப்பாக செயல்படுகிறது.கீழே உள்ள இணைப்பை சொடுக்கினால் இணைத்து பயன் பெறலாம் .உலாவிகளின் add on தொகுப்புகளிலும்  தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

 முகவரி :Ever note clearly

 நெருப்பு நரி உலாவிக்கு தேவையான இணைப்பு நீட்சிகள்

முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்

          பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும்  (ram ), 2 GB வன்தட்டில்  (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள்  தான் விலை கொடுத்து வாங்க முடியும்.

  .

     Blender இந்த மென் பொருள் முப்பரிமாணத்தில் படங்களை , உருவாக்கவும் , Photoshop மென்பொருள் போல சிறந்த விளைவுகளை சிறப்பாக உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த மென் பொருள் அளவு  40 MB தான் .Auto cad,3d max,rivet போன்ற மென்பொருள்களை பயன் படுத்தி பார்த்தவர்கள்  இதை பயன்படுத்தி பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள் .இது முற்றிலும் இலவச மென்பொருள் .இது 32bit மற்றும் 64bit window, Ox , Linux  போன்ற எல்லா இயங்கு தளத்தில் இயங்குகிறது.

Auto cad போல பெரிய project களை உருவாக்க முடியாது.ஆனால்  உருவங்களை நகர்த்தும்  வரைபட கலைக்கு (Animation) ஏற்ற மென்பொருள் .   புதிதாக கற்று கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் you tube க்கு சென்று  பல மாதிரிகளில் செய்முறையுடன்  காணொளிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்க்கலாம். Blender இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும்.கீழே நான்செய்து பார்த்த சில படங்கள் .

சுட்டி: Blender

vlc media player – க்கு புதுச்சட்டை போடுவது எப்படி !

  கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில்  window media player  -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம்  மற்றும்  லினக்ஸ்  பல  இயங்கு தளங்களில் vlc media player – ம்  இருக்கும் .vlc player  ஆனது கற்றற்ற  சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை  நாம் கணிணியில்  நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player  வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும்  பார்க்க பயன்படுத்தி இருப்போம் .

    இதை தவிர FM எனப்படும்   பண்பலை வாயிலாகவும்  இசையை  கேட்டு  ரசிக்கலாம்.மற்றும்  திரைப்படம் , பாடல்கள்  போன்றவற்றை  நமக்கு  தேவை படும் அளவிற்கு வெட்ட பயன் படுத்தலாம் .பலவிதமான  கோப்புகளையும் (mp3,mp4,dvd,svcd) பயன்படுத்த ஆதரவு அளிக்கும்.இந்த vlc player   நல்ல அருமையான மென்பொருள் தரவிறக்கம் செய்து  அப்படியே பயன் படுத்தி கொண்டு இருப்போம் . அதன் தோற்றத்தை  பல விதமான  மாதிரிகளில்  மாற்றி பயன் படுத்தலாம் .vlc palyer- ன் புதிய பதிப்பான two   flower 2.0.8  -ஐ தரவிறக்கம்  செய்ய   சுட்டியை  சொடுக்கவும்.

   இந்த video LAN  தளத்தில்  vlc  > skin > download  க்கு சென்றால் பல விதமான தோற்றங்களை பார்க்கலாம் .நமக்கு  பிடித்த தோற்றத்தை தேர்வு  செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .தரவிறக்கம்  செய்ததை   தொகுப்பை கீழ்கண்ட வாறு சேர்த்து விடவும் .

 local disk (c)  > program files  > video LAN  > vlc  > skin இல்  சேமிக்கவும் .

பிறகு vlc  media player திறக்கவும் .tools ஐ சொடுக்கி  preference (ctrl+p)தொகுப்பை  தேர்வு  செய்யவும் அல்லது  vlc  media player  மேல் சுலழியின் வலது பக்கம் சொடுக்கியும்  பெறலாம். இப்பொழுது  ஒரு சாரளம் திறக்கும்.இதில்  use custom  skin என்பதை  தேர்வு  செய்து  browse என்பதை சொடுக்கி ஏற்கனவே

 local disk (c)  > program files  > video LAN  > vlc  > skin

சேமித்து வைத்துள்ள  skin தேர்வு செய்து  பின்னர்  சேமித்து விடவும் .இப்பொழுது vlc player நீங்கள் விரும்பிய  தோற்றத்தில்  இருக்கும். பழைய படி  வேண்டும் என்றால்  interface settings > use native style என்பதை தேர்வு செய்து பெறலாம்.இந்த video LAN  தளத்தை தவிர ,பல தளங்களில் இருந்தும்    skin கிடைக்கும்.  எதையும் தரவிறக்கம் செய்த பின்  நல்ல anti -virus , malwarebytes anti -malware மென்பொருள் சோதனை செய்த பின் நிறுவுவது நல்லது.

ஆபத்தான வேலைகள் ஒரு பார்வை

             காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று மட்டும் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் பாடி இருப்பார்.மக்கள்  வசதிகளையும் ,தேவைகளையும்  பூர்த்தி செய்ய கிராமங்களை  விட்டு நகரை நோக்கி குடி பெயர தொடங்கி விட்டதால் நகரத்தில் இன்று இட  பற்றாக்குறை  தீர்வு அடுக்கு மாடி குடியருப்புகள் .புதியதாக  கட்ட பட்டு வரும் அடுக்கு மாடி குடியருப்பு அருகே  செல்லும் போது வர்ணம்(Painting) பூசி கொண்டு இருந்தார்கள் .மிக உயரத்தில் எந்த  பாதுகாப்பு  சாதனமும் இல்லாமல்  அவர்கள் (Painter) வேலை செய்து கொண்டு இருப்பதைமனம் வருத்தப்பட்டேன்  .அவர்கள் வேலை செய்வதை படம் பார்க்க .

     ஒற்றை கயிறு ஒன்றில் ஊஞ்சல் போல  கட்டி மிக உயர்ந்த இடத்தில் சிறு பலகையை மட்டுமே இருக்கையாக கொண்டு அவர் வர்ணம் பூசி கொண்டு இருக்கிறார். அவருடைய நண்பர் அந்த கயிறை பிடித்து கொண்டு இருக்கிறார்.உயரம் குறைய குறைய அவர் பிடித்து இருக்கும் கயிறை தளர்த்துவார் .சுருக்கமாக கூறினால் வர்ணம் பூசிக்கொண்டு இருபவர்களின் உயிர் நாடி இவர் கையில்.உயிர் காப்பிடு திட்டம் (Life insurance )இருந்தாலும் எத்தனை பேர் அதை எடுத்து  கட்டி வருகிறார்கள் .வருவாய் வருவதில் பாதி சீமை தண்ணீக்கு (சாராயத்திற்கு) போய் விடுமே !

   நன்கு வளர்ந்த நாடுகளின் அறிக்கையை பார்த்தால் கட்டிட கட்டுமானத்திலே  தான் அதிக விபத்துகள் நடை பெறுவதாக காணலாம் .அதிலும் உயரத்தில் இருந்து விழும் விபத்துகள் 80%  அதிகம் .அதனால் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் எந்த வகையான வேலையானாலும் (அலுவலக வேலை நீங்கலாக )முதலில் பாதுகாப்பு வகுப்பு எடுக்கிறார்கள் தேர்வு வைத்து பாதுகாப்பு சான்றிதழ் (Safety certificate)கொடுக்கிறர்கள். இதில் கண்டிப்பாக பாதுகாப்பு சான்றிதழ்இருந்தால் தான் வேலை செய்ய முடியும்.இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது.

     தனக்கு பாதுகாப்பு கருவிகள் கொடுக்கிறார்கள் .இதை  கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.இந்த பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்துகிறீர்களா இல்லை வேறு எந்த பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என்பதை கண்காணிக்க பாதுகாப்பு அதிகாரி(Safety supervisor) உண்டு . 20 தொழிளார்களுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி கண்டிப்பாக நிறுவனம் நியமித்து இருக்க வேண்டும்.இல்லையெனில் அதற்கு அபராதம் கட்ட வேண்டும்.விபத்துகள் நடந்தாலும் இந்த அதிகாரி தான் அதற்க்கு பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனமும்வேலை செய்யும் தொழிலாளருக்கு காப்பீடு (Insurance)கண்டிப்பாக செய்து இருக்கும் .

       அடுக்கு மாடி கட்டிட கட்டுமான தளத்தில் வேலை செய்யும் வர்ணம் பூசுவது , கண்ணாடி ,சாளரம்  (Window)பொருத்துவது போன்ற எந்த  உயரமான வெளிவேலையாக இருந்தாலும்இடுப்பில்  பாதுகாப்பு வார்பட்டை( Safety Belt) , தலைக்கு கவசம்( Safety Helmet) , கால்களுக்கு காலனி( Safety shoe) ,கண்ணுக்கு கண்ணாடி ( Safety goggles)கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். இயந்திரம் பொருத்தப்பட்ட  இரும்பு கம்பி வடத்தில் தொங்கும் தளத்தில் (suspended platform )இருந்து தான் வேலை செய்ய வேண்டும்.அதுவும் இருவர் மட்டுமே நின்று பணி செய்யலாம் . இந்த தொங்கும் தளத்தில் இருந்து கொண்டுஇதைஇயக்கமுடியும்.

     இது (suspended platform )கட்டிடத்தின் மேல்பகுதியில்  உறுதியாக பொறுத்த பட்டு இருக்கும்.தனியாக ஒரு நல்ல கயிறு ஓன்று கட்டிடத்தின் மேல்பகுதியில் கட்டப்பட்டு வேலை செய்யும் நபரின்  இடுப்பில்   உள்ள பாதுகாப்பு வார்பட்டை உடன் இணைக்க பட்டு இருக்க வேண்டும்.ஒருவேளை தொங்கும் தளம் விழுந்தாலோ ,கவிழ்ந்தலோ  விபத்தில் இருந்து இந்த கயிறு  உயிர் காக்கும் .இதையும்மீறி  விபத்துகள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.நமது நாட்டில் சுதந்திரமாக வேலை செய்யலாம்.விபத்துகளுக்கு பின் அவரின் குடும்பத்திற்கு என்ன ஆதரவு .

    .பெரியஅளவில் பொருட்செலவு உள்ள   தொங்கும் தளத்தை அமைக்க முடியாத குத்தகைகார்கள்  மரத்திலான சாரத்தையாவது பயன் படுத்தவேண்டும்.தற்போது புதியதாக கட்டும் கட்டடத்தை சுற்றி தற்காலிகமாக தடுப்பு மறைப்பு வெளிநாடுக்களை போல அமைக்கிறார்கள் .இந்தியாவின் மற்ற நகரங்களில்  இந்த பாதுகாப்பு பற்றி பார்த்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அரசாங்கம் கண்டிப்பாக கட்டிட கட்டுமான சட்டம்சீர்திருத்தம் கொண்டு வந்து நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே சாத்தியம்.ஒவ்வொரு வீட்டின் பின்னும் ஏதோவொரு சோககதை இருக்கலாம் .முகம் தெரியாத அந்தநபர்களை நம்மில் ஏத்தனை பேர் நினைத்து பார்த்து இருப்போம் .

தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து

   தீ விபத்துகள் பெரும்பாலும் கவனக்குறைவாகவே     நிகழ்ந்து இருக்கிறது. தீ விபத்துகள் மின் கசிவு , சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு ,பட்டாசு வெடிப்பு,சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்திய தீ விபத்துகள் என்று பல நிகழ்வுகள் செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம் .ஆனால் தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து  பார்த்த போது கொஞ்சம் அதிர்சியாக இருந்தது.மனித தவறுகளில் தான் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் .எல்லோருக்கும் பயன்படுமே என்று தான் இந்த பதிவு.

எனது கைத்தொலைபேசிக்கு கணக்கில் பணம் நிரப்ப சென்ற போது அடுத்தடுத்த இருந்த வாடகை வீடுகளில் முதல் வீட்டில் இருந்து புகை மூட்டமாக தெரிந்தது. வீடு பூட்டி இருக்கிறது ஆனால் புகை அதிகமாக வர ஆரம்பித்தது .அதற்குள் ஒருவர் தீ அணைக்கும் துறைக்கு தகவல் தர  தீ அணைக்கும் வண்டி நிறுத்தும் இடம் அருகில் இருந்ததால் அடுத்த ஐந்து நிமிடத்தில்  அவர்கள் வந்து விட்டார்கள் .பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் .

   வீட்டில் உள்ள தொ(ல்)லைகாட்சி பெட்டி (Television)எரிந்து கொண்டு இருந்தது.தீ அணைக்கும் வீரர்கள் தீயை எளிதாக கட்டு படுத்தினார்கள் .வீட்டுக்கரா பெண்மணி விபரம்கேள்வி பட்டு அலறி அடித்து கொண்டு வந்து அழுகையுடன் வந்து சேர்ந்தார் .வீட்டின் நிலைமையை பார்த்த அவரால் பேச முடியவில்லை .வீட்டில் மின்சாரம் இருந்த போது தொ(ல்)லைகாட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்த்தவர் மின்சாரம் தடைப்பட்டுடன் நிறுத்தாமல் சென்று விட்டார்.மின்சாரம் அதிக அழுத்தத்தில் வந்தஉடன் தொ(ல்)லைகாட்சி பெட்டியில் உள்ள பட குழாய்(Picture tube) உடைந்து தீ பற்றி விட்டது.

    நல்ல வேலையாக   அதன்  அருகில் இருந்த சமையல் அறையில் திரவ எரிவாயு குழாய்க்கு(LP Gas hose) தீ பரவும் முன் அணைக்க பட்டு விட்டது.திரவ உருளை (LP Gas Cylinder) தீ பிடித்து இருந்தால் அடுத்தடுத்து இருத்த வீடுகளில் தீ பரவவுதுடன் பொருட் சேதம் அதிகமாக இருந்திருக்கும்.வீட்டுக்கார பெண்மணி தன் குழந்தைகள் வீட்டில் இருந்தால்  நிலைமை என்னவாகி இருக்கும் என்று எண்ணி புலம்ப ஆரம்பித்து விட்டார் . பொதுவாக எல்லோரும் மின் இணைப்பை தொலைக்காட்சி பெட்டியில் தான் மின் இணைப்பை நிறுத்துவார்கள் .மின்சாரம் வரும் பெட்டியில் உள்ள மின் இணைப்பை துண்டிப்பதில்லை .

   சிங்கையிலும் இதே  நிலையை  கண்டு இருக்கிறேன் .வீடுகளில் தங்கி இருக்கும் நண்பர்கள் சிலர் சமைப்பதற்கு  பொதுவாக மின் அடுப்பை பயன்படுத்துவர் .அதை உபயோகம் முடித்த பின்னர்  மின் இணைப்பை நிறுத்துவதில்லை .அதனால் தீ விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது.சிங்கையிலும் தீ அணைக்கும் கருவி யாரும் வீடுகளில் பயன்படுத்துவதில்லை .ஒரு சில   பணகார வீடுகளில் சிறிய அளவில் தீ அணைக்கும் கருவி (Fire extinguisher) சமையல் அறையில் மட்டும் இருக்கிறது.

தீ அணைப்பான்

   பொதுவாக எல்லா திரை அரங்குகளிலும் , வணிக வளாகத்தில் கண்டிப்பாக பார்வையில் படும்படி வைக்க பட்டு இருக்கும்.தண்ணீர் குழாய் இதற்க்கு என்று தனியாக பெரிய அளவில் இருக்கும்.நவீன படுத்தப்பட்ட  அணைத்து கட்டிடங்களிலும்  சிறிய தண்ணீர் குழாய் (singular pipe) கூரையின் கீழே பொருத்தப்பட்டு இருக்கும் . தீ பிடித்தவுடன் வெடித்து சிதறும்படி சிறிய கண்ணாடி குமிழ்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.நகரத்தில் உள்ள  வீடுகளில் தண்ணீர் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான். 

     தீ பற்றி எரிந்தவுடன் எல்லோரும் தண்ணீரை எடுத்து ஊற்றுங்கள் என்று கத்துவார்கள் .ஆனால் எத்தனை பேர் முயற்சி செய்வார்கள் ,எத்தனை பேர் தண்ணீர் எடுத்து வருவார்கள் .நடைமுறையில் பார்க்கும்போது பலர் முயற்சி செய்தது சற்று ஆறுதலாக இருந்தது.அனுபவங்கள் அடுத்தவர்கள் செய்கையில் இருந்து  கற்று கொள்வது புத்திசாலித்தனம் .சொந்த  அனுபவங்கள் விலை சற்று அதிகமாக கொடுத்து இருப்போம் .இலவச தொலைகாட்சி பெட்டி என்றாலும் நம்மில் எத்தனை பேர் சரியாக மின் நிறுத்தம் செய்கிறோம் ?

ஒரு தலை காதல் ஆபத்தானதா?

        காதல்  என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை   காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் சக மாணவியைபேருந்து நிலையத்தில் வைத்து  கத்தியால்  குத்திய அதிர்ச்சியான நிகழ்வை உறவினர் பார்த்திருக்கிறார்.முதுகலை பட்ட படிப்பை படித்து கொண்டிருக்கும் மாணவர்  இப்படி ஒரு  செயலை செய்திருப்பது  இளைய தலைமுறை எங்கே செல்கிறது கேள்வியை எழுப்புகிறது .ஒரு தலை காதல்   பற்றியதே இந்த பதிவு .

       மலரினும் மெல்லியது காதல் என்பார்கள்.பதின்ம வயதில் காதல் அனைவருக்கும் கண்டிப்பாக வரும் .அது பருவ வயதில் இனக்கவர்ச்சி .இருபதுகளில் வருவது காதல் தான் .காதலுக்கும் காமத்திற்கும்  இடைவெளி சிறிதளவே .காமத்தின் மறு வெளிப்பாடு என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் .காதல் முதலில் முக அழகையும் ,நிறத்தையும் வைத்து தான் வருகிறது.பின்னேர் காதல் நிலைத்து இருப்பது அன்பினால் மட்டுமே .இருவரும் காதலித்து திருமணம் வரை சென்றாலே அதுபெரிய விபரம்.கடைசிவரைக்கும் சேர்ந்து வாழ்வது என்பது இந்த அவசர காலத்தில் போற்றுதலுக்கு உரியது.இது  இருவருமே காதல் செய்தால் மட்டுமே சாத்தியம் .  

         திரைப்படமும் ,சின்னத்திரை  நிகழ்ச்சிகளும் மக்களை வெகுவாக பாதிக்கிறது.திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே திரை அரங்குகளை விட்டு வெளியில் வரும் போது  எல்லாத்தையும் விட்டு விட வேண்டும்.பெரும்பாலும் இந்திய திரைப்படங்களை பார்த்தால் காதலர்களை ஓன்று சேருவது தான் கதையாக இருக்கும்.கதாநாயகன் ,நாயகி  திருமணம் முடிந்த பின் உள்ளவாழ்க்கை கதையை யாரும் வெகுவாக எடுப்பதில்லை. பொதுவாக காதல் ஒரு முறையும்   பலருக்கு காதல் (காமம்) பல முறையும் வருவதுண்டு.  திரைபடத்தைபார்த்து காதல்உணர்வுகளை கற்பனைகளை உருவாக்கும் . திரைபடமும் யதார்த்த வாழ்க்கையும் ஒன்றாகாது .

        காதல் என்ற உணர்வு தன்னால்தனக்குள்  வருவது .அதை அடைய பலர் இரக்கத்தால் , பணத்தால் ,வீரதீர செயல்களால் , புகழால் இன்னும் பல வழிகளில் பெற முனைவதுண்டு.தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிய பிறகு வற்புறுத்துவது நல்ல செயல் அல்ல,தானாக கனிவதை தடியால் அடித்து கனிய வைப்பதற்கு ஒப்பாகும் .பலர் தற்கொலை செய்து கொள்வதாகக் மிரட்டுவது உண்டு.காதலை ஏற்றுக்கொள்ளததால்   தற்கொலைசெய்து கொள்வது அறியாமையாகும் .காதலுக்காக  செய்தோம் என்ற தவிர வேறு எதுவும் இல்லை.

    நாம் பிறந்த மண்ணுக்கு ,வீட்டுக்கு ,நாட்டுக்கு ,நன்றி கடன் பட்டவர்களுக்கு என்ன செய்தோம் என்று ஒரு கணம் யோசித்தால் இந்த திரிஷா இல்லாவிட்டால் திவ்யா என்ற மன நிலைமைக்கு வந்து விடுவார்கள் .  ஒரு தலை காதல் பெரும்பாலும் சொல்லாமல் இருந்து மனதிற்குள் வைத்து கொண்டு இருப்பதால் மன அழுத்தம் காரணமாக மனநலம் பாதிக்க பட்டுவிடும்.நல்ல நண்பர்கள் இருந்தால் எடுத்து சொல்லி பழைய நிலைமையை கொண்டு வரலாம் .அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் .கோபத்தின் அடுத்த நிலை வன்முறை .

     வளர்ந்த    வெளி நாடுகளில் காதல் முதல் காமம் வரை இது  பாவாமாகமோ ,குற்றமாகவோ  கருதுவதில்லை.அவரவர் துணையை அவர் தான் தேடி கொள்வர்.அந்த காதல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதற்கு தேவையான வசதிகளை  எல்லாம் சேர்த்த பிறகே திருமணம் செய்வர். பலர் நண்பர்களாக (கணவன் ,மனைவி போல )இருந்து வாழ்வோரும் அதிகம் உண்டு.இதற்கும் ஒரு ஒப்பந்தம் உண்டு.பிரிந்தாலும் இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை .இங்கு கவர்சியான உடைகளை பெண்கள் அணியும் நேரில் பார்த்தால் திரைபடத்தில் வரும் கனவுகன்னி நினைவுக்கு வர மாட்டார்கள்.வாழ்கையில் அழகு ஒரு அங்கம் .அது மட்டும் முழுமை ஆகிவிடாது.

புத்தியுள்ள மனிதர்  என்ற சந்திரபாபு  பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

      பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை

          காதல் கொண்ட  அனைவருமே மணம் முடிப்பதில்லை

    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து  வாழ்வதில்லை

        சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து  போவதில்லை ! 

படம் உதவி :கூகுள்

 படித்த உங்கள் கருத்துகளை பின்னுடம் இடுங்கள் .பதிவுபிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !